Description Of The Product:
சினிமா பார்க்கிற எல்லாருக்கும், குறிப்பாக ஹாலிவுட் பிரியர்களுக்கு CIA என்ற பெயர் நன்றாகத் தெரிந்திருக்கும். ஆனால் CIAவின் உண்மை வரலாறு அந்தச் சினிமாக் கதைகளையெல்லாம் விடச் சுவையானது, விறுவிறுப்பானது, பரபரப்பானது. உண்மையில் சிஐஏ என்ற அமைப்பை யார், எதற்காகத் தொடங்கினார்கள்? அவர்களுக்கு என்னென்ன அதிகாரங்கள் உண்டு, என்னென்ன அதிகாரங்கள் இல்லை, அந்த அதிகாரங்களையெல்லாம் மீறி அவர்கள் செயல்படுவதாகச் சொல்கிறார்களே, அதெல்லாம் உண்மைதானா? ஆம் எனில், சிஐஏ-வைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் யாரிடம்தான் இருக்கிறது? எங்கெல்லாம் அவர்களுடைய கரங்கள் நீண்டிருக்கின்றன? அவர்களுடைய வெற்றி, தோல்விகள் என்னென்ன? அனைத்தையும் சான்றுகளுடனும் விறுவிறுப்பாகவும் பேசுகிறது இந்த நூல். மொசாட், CIA, FBI, KGB எனப் பல உலக உளவு அமைப்புகளுடைய கதைகளையைச் சுவையான நூல்களாக எழுதியிருக்கும் என். சொக்கனின் இந்தச் சூப்பர் ஹிட் புத்தகத்தை ஒரு நாவல்போலப் படிக்கலாம், திரைப்படத்தைப்போல் மனக்கண்ணில் காணலாம், ஆனால், இவை அனைத்தும் உண்மையில் நடந்தவை, நடந்துகொண்டிருக்கிறவை என்பதை உணரும்போதுதான் அதிர்ச்சியும் திகைப்பும் பலமடங்காகும்!
SKU-NUDEUFWAUUHBAuthor:என். சொக்கன் N. Chokkan (Author)
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|