கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக கனடாவில் வாழும் ராஜாஜி ராஜகோபாலன் எழுபதுகளின்போது எழுத்துத் துறையில் காலடி பதித்தவர். இவரின் கவிதைகள், சிறுகதைகள், நாவல் என்பவை இவர் பிறந்து வளர்ந்த ஈழத்து வடபுலத்தின் சமூக, பண்பாட்டுக் கோலங்களையும் அனுபவங்களையும் ஏக்கங்களையும் பேசுகின்ற எழுத்துப் பிரதிகளாகக் கவனம் பெறுகின்றன. இதனால் இன்று இவர் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்த எழுத்தாளர்களில் தனித்துவமாக அறியப்படுகிறார்.
நாராயணபுரம் ராஜாஜியின் முதலாவது நாவலாகும். இதன் கதை இவர் வாழ்ந்த புலோலிக் கிராமத்தினதும் அதற்கு அண்மையில் உள்ள வல்லிபுர மாயவன் கோயிலினதும் மண்ணுக்கும் மக்களுக்கும் மிக நெருக்கமானதெனலாம். அங்கு நிலவும் வாழ்வியல் அம்சங்களையும் இயல்புகளையும் கலாசாரக் கூறுகளையும் வழக்காற்று மொழியையும் நுட்பமாகக் கையாளும் நாவலாகும் இது.
Author:ராஜாஜி
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|