காதல் திருமணமும் கலப்புத் திருமணமும் நம் சாதியச் சமூகத்தால் எவ்விதம் எதிர்கொள்ளப்படுகின்றன என்பதற்கான படைப்புச் சான்றுகள் மிகவும் அரிது. ஆனால் ஒவ்வொரு காலத்திலும் மனித இயல்பின் காரணமாக மீறல்களாக இவை நடைபெற்றே வந்திருக்கின்றன. தொடர்புடையவர்கள் பல்வேறு பிரச்சினைகளை அகரீதியாகவும் புறரீதியாகவும் எதிர்கொண்டு போராடி வீழ்ந்தும் வாழ்ந்தும் சக்தியற்றுக் கரைந்தும் எத்தனையோ விதமாக இந்தச் சமூகத்திற்குள் புதையுண்டு கிடக்கிறார்கள். காதல், கலப்பு மணம் ஒன்றில் ஈடுபட்ட இளம் தம்பதியர் குறித்த நாவல் இது. பரவசமாகவும் ஆவேசமாகவும் குரலை உயர்த்தி முழக்கமிடாமல் அன்றாட வாழ்வில் அவர்களுக்கு நிகழும் சம்பவங்களோடு மன உணர்வுகளை இயைத்து அனுபவமாக்கியிருக்கிறது இந்நாவல். ஒரு பிரச்சினையின் பல்வேறு கோணங்களை ஆராய்வதே படைப்பு என்பது இதற்கு முற்றிலுமாகப் பொருந்தும். பெருமாள்முருகனின் ஏழாம் நாவல் இது.
SKU-ZLEBJSM3ENOAuthor:Perumal Murugan
VARIANT | SELLER | PRICE | QUANTITY |
---|